இறுதிப்போட்டிக்கு முன்னேற போகும் முதல் அணி எது..? கொல்கத்தா - ஐதராபாத் நாளை பலப்பரீட்சை

ஐ.பி.எல். தொடரில் நாளை நடைபெற உள்ள முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
image courtesy:twitter/ @IPL
image courtesy:twitter/ @IPL
Published on

அகமதாபாத்,

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று ஓய்வு நாளாகும். பிளே-ஆப் சுற்று நாளை தொடங்குகிறது.

இதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிபயர் 1) புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com