சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடை
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள்

விளையாடின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக குல்பதில் நயின் 63 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி17.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்வது வழக்கம். இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள் விசில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த்னர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com