ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட தமிழக வீரர்களின் விவரம்.
Image Courtesy: Chennai Super Kings/ BCCI/IPL
Image Courtesy: Chennai Super Kings/ BCCI/IPL
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐயிடம் ஒப்படைத்தனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிராவோ, மில்னே, ஜோர்டான், ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களையும்,

மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட், சஞ்சய் யாதவ் உள்ளிட்ட வீரர்களையும், ஐதரபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், பூரன் உள்ளிட்ட வீரர்களையும் விடுவித்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை பற்றி பார்ப்போம். 2022 ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். 2022 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 13 தமிழக வீரர்களை அணிகள் தேர்வு செய்தன. ஏலத்துக்கு முன்பு, தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துக்கொண்டது .

2023 ஐபிஎல் போட்டிக்காகத் தக்கவைக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள்:-

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி

2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி

3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) - ரூ. 8 கோடி

4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி

5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி

6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி

7. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி

8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி

9. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்:-

1. எம். அஸ்வின் (மும்பை)

2. சஞ்சய் யாதவ் (மும்பை)

3. என். ஜெகதீசன் (சிஎஸ்கே)

4. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே)

5. பாபா இந்திரஜித் (கேகேஆர்)

விடுவிக்கப்பட்ட 5 வீரர்களுடன் சேர்த்து மேலும் சில தமிழக வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாக வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com