ரோகித்துக்கு பின் இந்தியாவின் ஆல் பார்மட் கேப்டன் யார்...? - தினேஷ் கார்த்திக் பதில்

ரோகித்துக்கு பின் இந்தியாவின் ஆல் பார்மட் கேப்டனாக யார்? வர வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மும்பை,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

அதேசமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்தனர். ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் ரோகித், சூர்யகுமார் யாதவ் இருவரும் வயது காரணமாக நீண்ட காலம் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட முடியாது. இந்நிலையில், ரோகித்துக்கு பின் இந்தியாவின் ஆல் பார்மட் கேப்டனாக யார்? வர வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வழி நடத்தக் கூடியவர்கள் என்று சொல்லும் போது இளமை மற்றும் திறமை கொண்ட 2 வீரர்களின் பெயர் என் மனதிற்குள் வருகிறது. ஒன்று ரிஷப் பண்ட் மற்றொன்று சுப்மன் கில். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் ஐ.பி.எல் கேப்டன்களாக இருக்கிறார்கள். எனவே வருங்காலத்தில் அவர்கள் இந்திய அணியின் ஆல் பார்மட் கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com