2019 உலக கோப்பையின் மூத்த வீரர் யார் தெரியுமா?

2019 உலக கோப்பையின் மூத்த வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2019 உலக கோப்பையின் மூத்த வீரர் யார் தெரியுமா?
Published on

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக வயதில் களம் இறங்கும் வீரர் யார் தெரியுமா? தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். அவரது தற்போதைய வயது 40 ஆண்டு 54 நாட்கள். சமீபத்தில் நிறைவடைந்த ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான (26 விக்கெட்) இம்ரான் தாஹிர் இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம்ரான் தாஹிருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (வயது 39), பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் (38), இந்தியாவின் டோனி (37) ஆகியோர் மூத்த வீரர்களாக வலம் வர உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com