3-வது வரிசையில் யார் விளையாடுவார் ? இந்திய அணி பயிற்சியாளர் தகவல்

நாளை முதல் டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது.
3-வது வரிசையில் யார் விளையாடுவார் ? இந்திய அணி பயிற்சியாளர் தகவல்
Published on

மும்பை,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாளை முதல் டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் நேற்று அளித்த பேட்டியில்,

'புஜாராவின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் பேட்டிங்கில் 3-வது வரிசையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது சரியானது அல்ல. முக்கியமான இந்த பேட்டிங் வரிசைக்கு யாராவது ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்வது அவசியம். இந்த டெஸ்டில் தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் 3-வது வரிசையில் ஆடுவார்கள். யார் விளையாடினாலும் அவர்கள் ரன் குவிக்க வேண்டும்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com