ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனக்குமுறலை கொட்டிய அஸ்வின்

கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது ஏன் என்பது குறித்து அஸ்வின் மவுனம் கலைத்துள்ளார்.
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனக்குமுறலை கொட்டிய அஸ்வின்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். சென்னை அணிக்காக பத்து கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த அஸ்வின் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாத நிலையில் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் லீக்குகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அஸ்வின் கூறினார். அஸ்வின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது ஏன் என்பது குறித்து அசுவின் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

சொந்த ஊரான சென்னையில் தொடங்கிய பயணத்தை அங்கேயே முடிப்போம் என நினைத்தேன். ஆனால் கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்தது. என்னை விடுவிப்பதா? தக்க வைப்பதா? என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து, நானே ஓய்வை அறிவித்தேன். நான் விலகியதால் சிஎஸ்கேவுக்குக் கிடைக்கும் ரூ.10 கோடியை வைத்து மினி ஏலத்தில் நல்ல வீரர்களை எடுப்பார்கள் என நம்பினேன். என்று மனக்குமுறலை கொட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com