சுப்மன் கில்லின் விக்கெட்டை அப்படி கொண்டாடியது ஏன்..? பாக்.வீரர் விளக்கம்


சுப்மன் கில்லின் விக்கெட்டை அப்படி கொண்டாடியது ஏன்..? பாக்.வீரர் விளக்கம்
x

image courtesy: twitter/@TheRealPCB

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மன் கில்லின் விக்கெட்டை அப்ரார் அகமது வீழ்த்தினார்.

லாகூர்,

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சுப்மன் கில் 46 ரன்களில் அப்ரார் அகமதுவின் சுழலில் போல்டானார். இதனை அப்ரார் அகமது ஆக்ரோஷமாக கொண்டடினார். சுப்மன் கில்லை பார்த்து வெளியே போ.. வெளியே போ.. என்ற வகையில் பெவிலியன் நோக்கி தலையசைத்து கொண்டாடினார். இதனால் சுப்மன் கில் கோபத்துடன் பெவிலியின் சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது. பல முன்னாள் வீரர்கள் அப்ரார் அகமதை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் சுப்மன் கில்லின் விக்கெட்டை அப்படி கொண்டாடியதற்கான காரணம் குறித்து அப்ரார் அகமது விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அது என்னுடைய ஸ்டைல். அதில் எதுவும் தவறாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு கொண்டாடியதில் தவறு இருந்ததாக போட்டி நடுவர்கள் யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி கொண்டாடியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்புடன் வருந்துகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல" என்று கூறினார்.

1 More update

Next Story