வெற்றி பெற்றும் தண்டனை… பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றும் தண்டனை… பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்
Published on

சென்னை,

சென்னை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மெதுவான பந்து வீச்சு (slow over-rate) காரணமாக, பஞ்சாப் அணிக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்கு (பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் உட்பட) தலா ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தின் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைவோ அதனை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த சீசனில் இது பஞ்சாப் அணியின் இரண்டாவது மெதுவான பந்து வீச்சு என்பதால் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read
“இரண்டு மோசமான இன்னிங்ஸ்களை வைத்து சாம்சனை ஜட்ஜ் பண்ணாதீங்க’’ - சிஎஸ்கே பயிற்சியாளர்
வெற்றி பெற்றும் தண்டனை… பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்

பிசிசிஐ விதிமுறைகள் (ஓவர் ரேட்):

முதல் முறை - கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

இரண்டாவது முறை - கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

இரண்டாவது முறை - மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது 25 சதவிகிதம் போட்டி ஊதியம்

மூன்றாவது முறை - கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் + அடுத்த போட்டியில் தடை

மூன்றாவது முறை - மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது 50சதவிகிதம் போட்டி ஊதியம்

X

Daily Thanthi
www.dailythanthi.com