ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்காதது ஏன்..? கம்பீர் பதில்.. ரசிகர்கள் விமர்சனம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமளிக்காத இந்திய தேர்வுக்குழுவை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கம்பீர், "நான் ஒன்றும் தேர்வாளர் கிடையாது" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார்.

இதனால் கடுப்படைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கம்பீரை விமர்சித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com