ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஷாகின் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது ஏன்..? - ஹபீஸ் விளக்கம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
Image Courtesy: @TheRealPCB
Image Courtesy: @TheRealPCB
Published on

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஷாகின் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கர் யூனிஸ் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், ஓய்வு அளிக்கப்பட்டது ஏன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் முகமது ஹபீஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஷாகின் அப்ரிடி தாமாக முன்வந்து இந்த போட்டியில் தனக்கு ஓய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் பிறகே அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com