ஐபிஎல் 2021: ராஜஸ்தானை சமாளிக்குமா ஐதராபாத்?

முந்தைய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 126 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டது.
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை சமாளிக்குமா ஐதராபாத்?
Published on

இனி அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முடிந்த அளவுக்கு முயற்சிக்கும். வார்னர், கேப்டன் வில்லியம்சன் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்புக்கான நெருக்கடி கொஞ்சம் குறையும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com