வில் ஜாக்ஸ் புதிய சாதனை

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ், 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்..
வில் ஜாக்ஸ் புதிய சாதனை
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ், 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை (மொத்தம் 4 விருதுகள்) வென்ற வீரர் என்ற சாதனையை வில் ஜாக்ஸ் படைத்துள்ளார்.


இதன் மூலம் கெவின் பீட்டர்சன், லூக் ரைட், ஜோஸ் பட்லர் மற்றும் அடில் ரஷித் (தலா 3 விருதுகள்) ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 4 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சனின் (2012-ல் படைத்த சாதனை) உலக சாதனையை வில் ஜாக்ஸ் தற்போது சமன் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com