

மெல்போர்ன்,
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்தின் வில் ஜாக்ஸுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், இத்தொடரில் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
முதல் டி20 போட்டியில் வில் ஜாக்ஸ் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும், பந்துவீச்சில் 2.4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வில் ஜாக்ஸுக்கு பதிலாக அணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டி20 தொடர் அட்டவணை
2-வது போட்டி - நவம்பர் 24, கராரா
3-வது போட்டி - நவம்பர் 27, பிரிஸ்பேன்
4-வது போட்டி - நவம்பர் 29, சிட்னி
5-வது போட்டி - டிசம்பர் 2, கான்பெரா