நாளைய போட்டியில் விளையாடுவாரா ருதுராஜ்? பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி


நாளைய போட்டியில் விளையாடுவாரா ருதுராஜ்? பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி
x

ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவாரா ? என்பது குறித்து பேட்டிங் பயிற்சியளர் மைக் ஹசி விளக்கமளித்துள்ளார் .

சென்னை ,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 4வது போட்டியில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி அணியுடன் மோதுகிறது .

இந்த நிலையில், நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவாரா என்பது குறித்து பேட்டிங் பயிற்சியளர் மைக் ஹசி விளக்கமளித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

"கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த ஸ்டம்புகளுக்கு பின்னே ஒருவர் உள்ளார். என தெரிவித்தார் .

1 More update

Next Story