

புதுடெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சூர்யவன்ஷி. 15 வயதே ஆன சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களே வாய் பிளக்கும் அளவுக்கு மிரட்டி வருகிறார். உலகத்தரம் வாய்ந்த பும்ரா உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் பந்துகளை அநாயசமாக சிக்சருக்கு விளாசும் சூர்யவன்ஷி, இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 37 சிக்சர் உள்பட 400 ரன்கள் சேர்த்துள்ளார். உலகில் உள்ள அத்தனை முன்னணி பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்யும் அவர் ஏற்கனவே இளையோர், ஜூனியர் போட்டிகளிலும் சிக்சர் மழையால் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் சூர்யவன்ஷி குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நவுமன் நியாஸ் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், 'அந்த சின்னபையன் அடிக்கிற அடி, சாதாரண மனிதனின் அடி போன்றே தெரியவில்லை. ஒரு வேளை அவரது பேட்டில் செயற்கை நுண் ணறிவு (ஏஐ) சிப்பை பொருத்தி, அதன் மூலமே இத்தகைய சக்தி வாய்ந்த ஷாட்டுகளை அடிக்கிறாரோ என்று கூட சந்தேகமாக உள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்துவது போல் சூர்ய வன்ஷியின் பேட்டை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும்' என்று வேடிக்கையாக கூறியிருந்தார்.
இது பற்றி சூர்யவன்ஷியிடம் கேட்ட போது, 'அந்த சிப்பை கடவுள் தான் எனது பேட்டில் இணைத்துள்ளார். அதை நான் பயன்படுத்துகிறேன்'