

அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங் கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந் தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்கும் சோபி மோலினக்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய பேட்டர்கள் நிலைத்து நின்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர் மன்பிரீத் கவுர் (கேப்டன்). ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ஸ்ரீசரனி, ரேணுகா சிங்.
ஆஸ்திரேலியா: ஜார்ஜியா வோல், பெத் மூனி, போபி லிட்ச்பீல்டு, எலிசி பெர்ரி, ஆஷ்லி கார்ட்னெர். ஜார்ஜியா வார்ஹாம், அனபெல் சுதர்லாண்ட், நிகோலா கேரி, சோபி மோலினக்ஸ் (கேப்டன்), கிம் கார்த், டார்சி பிரவுன்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.