இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவீர்களா ? ரஷித் கான் பதில்

ரஷித் கான், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ர்.

 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவீர்களா ? ரஷித் கான் பதில்
Published on

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன் னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், ரஷித்கானிடம், ஜூன் 6-ந்தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்போதைக்கு டெஸ்ட் போட்டி யில் ஆடுவதில்லை என்று கூறினார்.

உடல்தகுதி விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்கிறேன். 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு என்னை சிறந்த முறையில் தயார்படுத்த வேண்டும். அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி முதுகில் ஏதாவது பிரச்சினை நிகழ்ந்தால் என்ன செய்வது ? டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவது எனக்கு கடினமான ஒன்றாகவே தோன்றுகிறது. வருடத் திற்கு ஒரு டெஸ்ட் என்றால் ஏற்றுக்கொள்வேன். அதற்கு மேல் என்னால் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை' என்று ரஷித்கான் குறிப்பிட் டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com