பெங்களூருக்கு எதிரான வெற்றி: பந்துவீச்சாளர்களை பாராட்டிய சுப்மன் கில்

பெங்களூரு அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது என சுப்மல் கில் கூறினார்.
பெங்களூருக்கு எதிரான வெற்றி: பந்துவீச்சாளர்களை பாராட்டிய  சுப்மன் கில்
Published on

அகமதாபாத்,

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது;

பெங்களூருக்கு எதிரான வெற்றி மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. பெங்களூரு அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது. எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான பந்துவீசினார்கள். இந்த வெற்றிக்கு எங்களது பீல்டிங்கும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

திவாட்டியா எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். அவர் ஆட்டத்தை முடித்துக் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இலக்கை துரத்தும்போது நாங்கள் ஒருசில விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தோம். ஆனால் இறுதியில் திவாட்டியா சிறப்பாக விளையாடினார். எங்களது பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com