சென்னைக்கு எதிரான வெற்றி: சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன.?

கிளாசனும், இஷான் கிஷனும் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெறச் வைத்ததாக கம்மின்ஸ் கூறினார்.
சென்னைக்கு எதிரான வெற்றி: சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன.?
Published on

சென்னை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இந்த வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது;

”சென்னை அணிக்கு எதிரான வெற்றி திருப்தியளிக்கிறது. வழக்கமாக விளையாடுவதை விட ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருந்தது. பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான விக்கெட்டாக இருந்தது. கிளாசன் மற்றும் இஷான் இருவரும் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்தனர்.

இலக்கை அடைய ஒன்று அல்லது இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்கள் தேவை என்று நாங்கள் நினைத்தோம். களத்தில் இறங்கியவுடன் அது சற்று எளிதாகிவிடும். ஒரு புதிய பேட்ஸ்மேனுக்கு இது மிகவும் கடினம். ஆனால் கிளாசனும், கிஷனும் சில நம்பமுடியாத ஷாட்களை ஆடினார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்

நாங்கள் தகுதிச் சுற்றுக்குள் நுழைந்துவிட்டோம். இனிதான் உண்மையான ஆட்டம் தொடங்குகிறது. அதனால் நிறைய கடின உழைப்பு தேவை. இன்னும் ஒரு ஆட்டம் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய முயற்சிப்போம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com