

மும்பை,
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறி இருப்பதாவது;
எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நான் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. சில சூழ்நிலைகளில், சிறிதளவு ஆதரவு மட்டுமே கொடுத்தேன். ஆனால் இறுதியில், அவர்கள் தங்கள் மன உறுதியை வெளிப்படுத்திய விதமும், பந்துவீசிய விதமும் பாராட்டத்தக்கது.
220-225-230 ரன்கள் வரை எந்த இலக்கையும் துரத்திப் பிடிக்க முடியும் என்பது எங்களுக்கு எப்போதுமே தெரியும். இலக்கை துரத்தும்போது ஒரு நல்ல தொடக்கம் இருப்பது எப்போதுமே முக்கியம். நாங்கள் பேட்டிங்கைத் தொடங்கிய விதம், குறிப்பாக ரியான் ரிகல்டன், மிக அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். ரோகித் ஷர்மா உடற்தகுதியுடனும், ஆர்வத்துடனும் அணிக்குத் திரும்பினார். அவரது பேட்டிங் நம்பமுடியாததாக இருந்தது. இது அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது. இறுதியில், நமன் திர் மற்றும் அனைவரும் பேட் செய்த விதம், நன்றாக இருந்தது.”
இவ்வாறு அவர் கூறினார்.