‘இலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு’ - பிளிஸ்சிஸ்

இலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு போன்றது என தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் தெரிவித்தார்.
‘இலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு’ - பிளிஸ்சிஸ்
Published on

செஸ்டர்-லீ-ஸ்டிரிட்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. பின்னர் தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றி வந்து இருக்கிறது. இது ஒரு அருமையான ஆட்டம். எங்கள் அணியின் திறமைக்கு தகுந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி கசப்பான இனிப்பாகும். எங்களது இயல்பான பேட்டிங்கை இந்த ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டது எங்களது உலக கோப்பை பயணத்தை திசைதிருப்பி விட்டது. முதல் வாரத்தில் அடுத்தடுத்து சந்தித்த தோல்வியினால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com