உலக கோப்பை அரைஇறுதி போட்டிக்கு இந்த அணிகள் தான் முன்னேறும் - கங்குலி கணிப்பு

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோத வேண்டும் என்று விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை அரைஇறுதி போட்டிக்கு இந்த அணிகள் தான் முன்னேறும் - கங்குலி கணிப்பு
Published on

 கொல்கத்தா.

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

இந்தநிலையில் கொல்கத்தாவில் நடை பெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான கங்குலி விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டி எல்லா அணிகளுக்கும் நெருக்கடியாகவே இருக்கும். கடந்த உலக கோப்பையில் ரோகித்சர்மா 5 சதம் அடித்தார். இதனால் இந்த உலக கோப்பையிலும் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதேபோல் நியூசிலாந்து அணியையும் சாதாரணமாக கருத முடியாது. பாகிஸ்தானும் அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோத வேண்டும் என்று விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com