கொரோனா தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல்

கொரோனா தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பெங்களூரு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல், கடந்த தொடரில் 5 அரைசதம் உட்பட 473 ரன்கள் எடுத்த இவர், பெங்களூரு அணிக்காக அதிக ரன் எடுத்த வீரர் ஆனார். சையது முஷ்தாக் அலி டிராபி தொடரில் 218 ரன், விஜய் ஹசாரே தொடரில் 737 ரன் (5 சதம்) குவித்தார்.

14வது சீசன் தொடரில் தனது அதிரடியை காட்ட காத்திருந்த தேவ்தத் படிக்கலுக்கு, கொரோனா தொற்று ஏற்பட, மார்ச் 22-ம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து தேவ்தத் படிக்கல் முழுமையாக மீண்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானது பின்னடைவு தான். இருப்பினும் தற்போது நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறேன். கடந்த ஐ.பி.எல். போட்டி எனக்கு அருமையாக அமைந்தது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டேன். அந்த பார்மை ஐ.பி.எல். போட்டியிலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த சீசனிலும் நன்றாக செயல்பட முடியும் என நம்புகிறேன். கோலி, டிவில்லியர்சுடன் இணைந்து களமிறங்க காத்திருக்கிறேன். இவர்களுடன் விளையாடும் போது முடிந்தவரை புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். மைதானத்தில் ரசிகர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உற்சாகத்தை அவர்கள் கொண்டு வருவர். விரைவில் ரசிகர்கள் மைதானம் வருவார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com