ஆஷஸ் டெஸ்ட்: 268 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 268 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
ஆஷஸ் டெஸ்ட்: 268 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 442 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 5-வது சதத்தை எட்டிய ஷான் மார்ஷ் 126 ரன்களுடன் (231 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் (57 ரன்), பேட் கம்மின்ஸ் (44 ரன்) நல்ல ஒத்துழைப்பு தந்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில், தங்கள் விக்கெட்டுகளை தாரைவர்த்தது. இலங்கை அணியின் எந்த பேட்ஸ்மேனும் அரை சதம் கூட எட்டவில்லை.

76.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து, 215 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, ஆண்டர்சன், வோக்ஸ் பந்து வீச்சில் நிலைகுலைந்தது. 50 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்துள்ளது. ஆண்டர்சன், வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியில்ஹேண்ட்ஸ்கோம்ப், நாதன் லயன் ஆகியோர் தலா 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால், ஆஸ்திரேலிய அணி 268 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com