மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை


மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை
x
தினத்தந்தி 31 Jan 2025 6:54 PM IST (Updated: 31 Jan 2025 7:00 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 163 ரன்கள் அடித்துள்ளார்.

மெல்போர்ன்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள ஆஸ்திரேலியா 422 ரன்கள் குவித்துள்ளது. பெத் மூனி 98 ரன்களுடனும், தஹ்லியா மெக்ராத் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அன்னாபெல் சதர்லேண்ட் 163 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் இதுவரை 252 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story