பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
Published on

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத் தப்பட்டு வருகிறது. இதில் முதல் 4 போட்டிகள் 50 ஓவர் வடிவிலும், அடுத்த 5 போட்டிகள் 20 ஓவர் அடிப்படையிலும் நடைபெற்றன.

இந்த நிலையில் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் இன்று முதல் அடுத்த மாதம் (செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்கிறது. துபாயில் இந்த போட்டி அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும்.

இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் தாய் லாந்து, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை. முன்னாள் சாம்பியனான வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியா முதல்முறையாக தகுதி பெற்று இருக்கிறது.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடி வில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹாங்காங்- தாய்லாந்து (ஏ பிரிவு) அணிகள் சந்திக்கின்றன. எல்லா ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகின்றன. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மறுநாள் (30-ந் தேதி) தாய்லாந்தையும், செப்டம்பர் 3-ந் தேதி ஹாங் காங்கையும். 5-ந் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com