பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
Published on

சிட்னி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது. ஜார்ஜியா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com