மகளிர் கிரிக்கெட்; 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (3-2 ) முதல்முறையாக வென்று வரலாறு படைத்த இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும்.

அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க வெற்றிக்காக இங்கிலாந்து அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com