மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ராதா யாதவ் சேர்ப்பு

Image Courtesy: @BCCIWomen
சுழற்பந்து வீச்சாளர் சுசி உபாத்யாய் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
மும்பை,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 28-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வரும் 28-ந் தேதி நடக்கிறது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இடம் பிடித்து இருந்த 20 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சுசி உபாத்யாய் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீராங்கனையை அறிவித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவை மகளிர் தேர்வு கமிட்டி மாற்று வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது.






