மகளிர் கிரிக்கெட்; முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு


மகளிர் கிரிக்கெட்; முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
x

Image Courtesy: @ICC

இலங்கை அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கொழும்புவில் நடக்கிறது.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விவரம்: சமாரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்ஷி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுடு நாணயக்காரா, டெவ்மி விஹங்கா, இனோகா ரனவீரா, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரத்னே, ராஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, அச்சினி குல்சூரியா.




1 More update

Next Story