பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் மோலினக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

டாக்கா,

ஆஸ்திரேலியா மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

44.1 ஒவர்கள் வரை தாக்குப்பிடித்த வங்காளதேசம் வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக நஹிதா அக்டர் 22 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மோலினக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 23.5 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com