மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை இழந்த ஸ்மிருதி மந்தனா


மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை இழந்த ஸ்மிருதி மந்தனா
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 30 July 2025 11:00 AM IST (Updated: 30 July 2025 11:00 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளி​யிட்​டுள்ளது.

துபாய்,

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பிந்தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டும் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்திற்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இன்றி இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்தையும், மேகன் ஷட் 3ஆம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா நான்காம் இடதையும் தக்கவைத்துள்ளனர்.

1 More update

Next Story