2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி: 2 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்


2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி: 2 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்
x

image courtesy:twitter/@BCCIWomen

கடந்த ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதன்படி கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் போட்டிக்கான அணியை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. அதில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-

லாரா வோல்வார்ட் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, சமரி அதபத்து, ஹெய்லி மேத்யூஸ், மரிசான் கேப், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டோன் மற்றும் கேட் கிராஸ்.

1 More update

Next Story