மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

image courtesy:ICC
இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
லண்டன்,
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் களம் காணுகின்றன.
இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலைமையிலான அந்த அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்:
நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), எம் ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், அலைஸ் கேப்ஸி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், சாரா க்ளென், எமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், லின்சி ஸ்மித், டேனி வயட்-ஹாட்ஜ்.
இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.






