பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அரை சதம் விளாசல்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அரை சதம் விளாசியுள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பிரிஸ்டல்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.

இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி கூறிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். ஆனால், சவாலை ஏற்று கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்கள் என்றால் பின்னர் ஆட்டம் எங்கள் வசப்பட்டு விடும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், 41.1வது ஓவரில் மிதாலி ராஜ் பவுண்டரி விளாசினார். இதனால், அவர் அரை சதம் கடந்துள்ளார். இங்கிலாந்தில் 13வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவருக்கு முன் சார்லட் எட்வார்ட்ஸ் 22 அரை சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

எனினும், 45வது ஓவரில் எக்ளெஸ்டோன் வீசிய 3வது பந்தில் மிதாலி ராஜ் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) போல்டானார்.

இந்திய பெண்கள் அணி 46 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து உள்ளது. பூஜா (12) மற்றும் தன்யா (1) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com