பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
Published on

பிரிஸ்டல்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.

இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி கூறிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். ஆனால், சவாலை ஏற்று கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்கள் என்றால் பின்னர் ஆட்டம் எங்கள் வசப்பட்டு விடும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com