மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் 2 வீராங்கனைகள் விலகல்

தியா யாதவ், மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர்.
மும்பை,
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர்.தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர்.
பிரகதி சிங் மற்றும் எட்லா ஸ்ருஜனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.டெல்லி அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story






