மகளிர் பிரீமியர் லீக்: 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி


மகளிர் பிரீமியர் லீக்: 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
x

18.5 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நவி மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் அதிரடி காட்டிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ராதா யாதவ் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பெத் மூனி 27 ரன்களிலும், சோபி டிவைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பார்தி ஃபுல்மாலி 39 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 18.5 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பெங்களூரு அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட்டுகளையும், லாரன் பெல் 3 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் நடின் டி கிளெர்க் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

1 More update

Next Story