மகளிர் பிரீமியர் லீக் - டெல்லியை வீழ்த்தி 2-வது கோப்பையை வென்ற பெங்களூரு

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்று 2-வது கோப்பையை கைப்பற்றியது.
மகளிர் பிரீமியர் லீக் - டெல்லியை வீழ்த்தி 2-வது கோப்பையை வென்ற பெங்களூரு
Published on

வதோதரா,

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸை வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் டெல்லி அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். லிசில் லீ 37 ரன்களும், ஷாபாலி வர்மா 20 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிலைத்து ஆடிய லாரா வால்வார்ட் 44 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டாக்காரர்கள் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இதில் கிரேஷ் ஹாரிஸ் 9(7) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Also Read
டி20 உலகக் கோப்பை: இந்திய ஆடவர் அணிக்கு மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து
மகளிர் பிரீமியர் லீக் - டெல்லியை வீழ்த்தி 2-வது கோப்பையை வென்ற பெங்களூரு

அடுத்து ஸ்மிருதி மந்தனாவுடன் ஜியார்ஜியா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து 79(54) ரன்களில் இருந்தபோது ஜியார்ஜியா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கானை ரிச்சா கோஷ் 6(6) ரன்களில் அவுட்டாகி பெங்களூரு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்மிருதி மந்தனாவும் 87 (41) ரன்களில் அவுட்டாக எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டது. இறுதியில் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டநிலையில், ராதா யாதவ் - நாடின் டி கிளார்க் ஜோடி 4 பந்துகளில் இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்று 2-வது கோப்பையை கைப்பற்றியது. டெல்லி தரப்பில் சின்னெல்லே ஹென்றி 2 விக்கேட்டுகளை எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com