மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோத உள்ளன.
image courtesy; @wplt20
image courtesy; @wplt20
Published on

பெங்களூரு,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.

இந்த தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 9 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள டெல்லி மற்றும் குஜராத் அணிகள் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com