மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

லாரென் பெல், சயாலி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி
Published on

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெற்று வரும் 11வது லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 62 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு அணியில் லாரென் பெல், சயாலி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 167 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com