மகளிர் பிரீமியர் லீக்; மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு


மகளிர் பிரீமியர் லீக்; மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
x

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் விளையாடுகின்றன.

வதோதரா,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது.

இதில் வதோதராவில் இன்று நடைபெறுகின்ற 2-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story