மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பெங்களூரு அணி :
கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா , தயாளன் ஹேமலதா, கவுதமி நாயக், ரிச்சா கோஷ், ராதா யாதவ், நாடின் டி கிளர்க், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், லின்சே ஸ்மித், லாரன் பெல்.
குஜராத் அணி:
பெத் மூனி, சோபி டெவின், ஆஷ்லே கார்ட்னர், ஷிவானி சிங், ஜார்ஜியா வேர்ஹாம், கனிகா அஹுஜா, பார்தி புல்மாலி, காஷ்வீ கெளதம், தனுஜா கன்வர், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா சிங் தாக்கூர்.






