

வதோதரா,
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக்(டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் அஸ்லி கார்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அஸ்லி கார்ட்னர் 46 ரன்களும், ஜார்ஜ் வெறெகாம் 44 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 168 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது.