மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
Published on

மும்பை,

5 அணிகள் இடையிலான 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜார்ஜியா 40 ரன்களும், பார்தி புல்மாலி 36 ரன்களும் எடுத்தினர்.

தொடர்ந்து 194 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com