மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணி வெற்றி

டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணி வெற்றி
Published on

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய குஜராத் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது. டிவைன் 38 ரன்னிலும் , அனுஷ்கா 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

தொடர்நது 208 ரன்களுடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ்20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com