பெண்கள் பிரிமீயர் லீக்: மெக் லானிங் அதிரடி...டெல்லி கேப்பிடல்ஸ் 211 ரன் குவிப்பு...!

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @wplt20
Image Courtesy: @wplt20
Published on

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும்.

இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மாவும், மெக் லானிங்கும் களம் இறங்கினர்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 32 பந்தில் 52 ரன் குவித்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா 18 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மாரிசேன் கெப் 16 ரன்னிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 70 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஆலிஸ் கேப்ஸி 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. டெல்லி தரப்பில் மென் லானிங் 70 ரன்னும் , ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்னும், ஜெஸ் ஜோனாசென் 20 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி அணி ஆட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com