மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை


மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
x

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி சஞ்சனா 45 ரன்கள், நிகோலா கேரி 40 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூரு அணியில் அபாரமாக பந்துவீசிய நடைன் டி கிளெர்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 155 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story