மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உபி வாரியர்ஸ்

மேக் லேனிங் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உபி வாரியர்ஸ்
Published on

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. அணி களமிறங்கி பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் உ.பி.வாரியர்ஸ் வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். அந்த அணியில் மேக் லேனிங் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹர்லின் டியோல் 47 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் உ.பி.வாரியர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 155 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com